பொது இடங்களில் பட்டாசு வெடிக்கத் தடை…புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பொது இடங்களில் பட்டாசு வெடிக்க சென்னை மாநகர் பொலிஸ்துறை தடை விதித்துள்ளது.
இது தொடர்பில், பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
“அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இப் புத்தாண்டை கொண்டாடுவதற்கு சென்னை பெருநகர பொலிஸ் ஆணையாளர் உத்தரவுக்கமைய சுமார் 19,000 பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக பொதுமக்கள் அதிகமாக கூடும் வீதிகள், கடற்கரை, வழிபாட்டுத் தலங்கள் போன்ற இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொலிஸாரின் உதவிக்காக சுமார் 1500 ஊர்க்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
31.12.2024 இரவு 09.00 மணியிலிருந்து பாதுகாப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும் 31.12.2024 மாலை முதல் 01.01.2025 வரை மக்கள் நீரில் இறங்கவோ அல்லது குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
எனவே இவ் வருட புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுமாறு பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.