அவுஸ்திரேலியாவில் இருந்து வந்தவர் மட்டக்களப்பில் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து அவுஸ்ரேலியா நாட்டைச் சோர்ந்த ஆண் ஒருவர் இன்றைய தினம் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த 71 வயதுடைய செல்லத்துரை கெங்காதரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இவ்விடம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் கடந்த ஒருமாதத்திற்கு முன்னர் அவுஸ்ரேலியாவில் இருந்து வந்து மட்டக்களப்பு மாமாங்கம் 6ம் குறுக்கு வீதியிலுள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் நேற்றைய தினம் படுக்கைக்குச் சென்றவர் அதிகாலையில் நித்திரையில் இருந்து எழும்பாத போது அவரை எழுப்ப முற்பட்டபோது அவர் உயிரிழந்துள்ள நிலையில் இருந்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, சடலத்தை நீதிமன்ற அனுமதியை பெற்று பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.