மாத்தறை-தங்கல்ல பிரதான வீதியில் கோர விபத்து – 61 பேர் படுகாயம் (Update)
மாத்தறையின் கந்தர பகுதியில் நடந்த சாலை விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 61 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் ஒரு வெளிநாட்டவரும் இரண்டு இளம் குழந்தைகளும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாத்தறை-தங்கல்ல பிரதான வீதியில் உள்ள கந்தர தலல்ல பகுதியில் எம்பிலிப்பிட்டியவிலிருந்து மாத்தறைக்கும், மாத்தறையிலிருந்து தங்கல்லைக்கும் பயணித்த இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், விபத்துக்குப் பின்னர ஏற்பட்ட போக்குவரத்து தடைப்பட்ட தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மழைக்காலங்களில் இந்த இரண்டு பேருந்துகளும் அதிவேகத்தில் பயணித்ததாக தற்போது தகவல் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மாத்தறை-தங்கல்ல பிரதான வீதியில் கோர விபத்து – 35 பேர் படுகாயம்
மாத்தறை-தங்கல்ல பிரதான வீதியில் கந்தர பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறைந்தது 35 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த பயணிகள் கந்தர மற்றும் மாத்தறை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.