புடினுக்கு எதிராக கொலை முயற்சி? வாகனத் தொடரணியில் கார் வெடிப்பு

புடினுக்கு எதிராக கொலை முயற்சி? வாகனத் தொடரணியில் கார் வெடிப்பு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வாகன அணிவகுப்பில் இருந்த கார் வாகனம் வெடித்து சிதறியது.

டொஸ்கோவில் உள்ள FSB (கூட்டாட்சி பாதுகாப்பு சேவை) தலைமையகம் அருகே கார் தீப்பிடித்தது. குறித்த சம்பவத்தின் போது காரில் யாராவது இருந்தார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அந்த சொகுசு கார் வெடித்து பின்னர் தீப்பிடித்து எரிந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கார் தீப்பிடித்து எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

காரில் இருந்து கடும் புகை எழுவதையும், அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சிப்பதையும் காட்சிகள் காட்டுகின்றன. காரின் இயந்திரப் பகுதியில் தொடங்கிய தீ, உட்புறம் முழுவதும் பரவியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு வதந்திகளும் விவாதங்களும் தொடங்கியுள்ளன.

விரிவான பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காரில் ஏற்பட்ட தீ விபத்து, புடின் மீதான கொலை முயற்சியா என்று பலர் விசாரித்து வருகின்றனர். இந்த கார் பல கோடி ரூபாய் மதிப்புடையதாகும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி புடினுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டிருந்தார்.

புடின் விரைவில் இறந்துவிடுவார் என்றும் ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்றும் ஜெலென்ஸ்கி கூறினார்.

Share This