ஆசிய கிண்ண தொடர் – முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி

ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஹொங்காங் அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை குவித்திருந்தது.
அஸ்மத்துல்லா உமர்சாய் 20 பந்துகளில் ஐந்து ஆறு ஓட்டங்கள் அடங்களாக 53 ஓட்டங்களை குவித்திருந்தார். இது இருபதுக்கு 20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர் ஒருவர் அடித்த வேகமான அரைசதமாகும்.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹொங்காங் அணி 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 94 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவிக்கொண்டது.
ஆசிய தொடரின் இரண்டாவது போட்டியில் இன்று இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.