உள்நாட்டு உற்பத்தி பொருட்களை மோடி பயன்படுத்துவாரா என அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி

உள்நாட்டு உற்பத்தி பொருட்களை மோடி பயன்படுத்துவாரா என அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி

இந்திய மக்கள் உள்நாட்டு உற்பத்தி பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்த நிலையில் முதலில் நீங்கள் பயன்படுத்துவீர்களா என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்  பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் ஜிஎஸ்டி மறுசீரமைக்கப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில நாட்டு மக்களிடம் நேற்று உரையாற்றிய  பிரதமர், வருமான வரி குறைப்பு மூலம் முதல் பரிசு வழங்கியதாகவும், ஜிஎஸ்டி குறைப்பு மூலம் இரண்டாவது பரிசு வழங்கியுள்ளதாகவும் பெருமிதம் கொண்டார்.

மேலும் இந்திய மக்கள் இந்திய பொருட்களை அதிகம் பயன்படுத்துவதன் மூலமே  சுய சார்பு இந்தியா இலக்கை அடைய முடியும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்த கருத்து தொடர்பில்  ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்  தனது எக்ஸ் பக்கத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தினமும் நீங்கள் சுற்றித் திரியப் பயன்படுத்தும் வெளிநாட்டு விமானத்தை விட்டுவிடுவீர்களா என்றும் நாள் முழுவதும் நீங்கள் பயன்படுத்தும் வெளிநாட்டுப் பொருட்களை விட்டுவிடுவீர்களா என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This