நாமல் ராஜபக்சவை இன்று கைது செய்ய ஏற்பாடு – சட்டத்தரணி மனோஜ் கமகே

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை இன்று (26) கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“இன்று, நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.” காரணம் என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை, அதனால் அதை முழுமையாக விளக்க முடியாது.
இந்த நாட்டில், ஒரு ராஜபக்ச எப்போதும் சிஐடிக்கு அழைக்கப்படுகிறார். இது ஒரு பொதுவான நடைமுறையாகிவிட்டது. இன்று நாமல் ராஜபக்சவை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் இருப்பதாக எங்களுக்கு சில ஆதாரங்கள் கிடைக்கின்றன.
அவர்கள் என்ன திட்டம் வைத்திருக்கின்றார்கள் என்று எங்களுக்குத் தெரியாது” என அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய விமானங்களை வாக்குதற்கான ஒப்பந்தத்தின் போது நடந்ததாகக் கூறப்படும் நிதி பரிவர்த்தனை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க நாமல் ராஜபக்ச இன்று (26) காலை குற்றப் புலனாய்வுத் துறைக்கு வந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.