உங்களுக்கு ஏழரை சனி நடக்கிறதா? இந்த பரிகாரங்களை செய்தால் நன்மை கிட்டும்

கர்ம காரகன் என கூறப்படும் சனி பகவான் குறிப்பிட்ட ஒரு ராசியில் சஞ்சரிக்கும்போது அந்த ராசிக்கும் அதற்கு முன் மற்றும் பின் ராசிகளை ஏழரை சனி பாதிக்கும்.
இந்த ஏழரை சனிக் காலத்தில் சனி பகவான் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்துவார்.
அதாவது, தொழில், சம்பளம் போன்ற விடயங்களில் அசுபமான பலன்களும் சிக்கல்களும் உருவாகும்.
இவ்வாறு சனியினால் பாதிக்கப்பட்டுள்ள ராசிக்காரர்கள் சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதும் அனுமான் வழிபாடு செய்வதும் சனி ஸ்தோத்திரத்தை உச்சரிப்பதும் நன்மை பயக்கும்.
அதுமட்டுமின்றி சொல், செயல் அனைத்தும் நிதானம் மற்றும் நேர்மையாக இருக்க வேண்டும்.
பரிகாரம்
சனிக்கிழமைகளில் வெள்ளம் மற்றும் கருப்பு எள் கலந்த நீரை அரச மரத்துக்கு ஊற்றவும். நாள்தோறும் சூரிய பகவானுக்கு அர்க்கியம் செய்யவும். மாலை நேரங்களில் நல்லெண்ணெய் ஊற்றிய விளக்கில் கருப்பு எள் திரியில் அரச மரத்துக்கு கீழ் ஏற்றி பிரார்த்தனை செய்யவும்.
விநாயகர், காயத்ரி மந்திரங்களை உச்சரிக்கவும். நேரம் இருக்கும்போதேல்லாம் அருகிலுள்ள சிவ ஆலயத்துக்கு சென்று வழிபடவும்.