
பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நியமனம்
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் நிஷான் தனசிங்க, பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்துவதற்காக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார்.
இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
CATEGORIES இலங்கை
