சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் – மீள் பரிசீலனைகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்பு

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் – மீள் பரிசீலனைகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்பு

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் மறு மதிப்பீட்டிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கடைசித் திகதி ஜூலை 28 என அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகள் கடந்த 10ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருந்தது.

நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையில் மொத்தம் 474,147 பேர் தோற்றியிருந்தனர். இதில் 398,182 பாடசாலை மாணவர்கள் ஆவர்.

வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில், 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்வியை தொடர தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் மறு மதிப்பீட்டிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Share This