கொழும்பில் தரமற்ற கட்டுமானங்களை கொண்டுள்ள அடுக்குமாடி குடியிறுப்புகள் – சிறுவன் தலையில் விழுந்த சிமென்ட் பிளாஸ்டர்

கொழும்பில் தரமற்ற கட்டுமானங்களை கொண்டுள்ள அடுக்குமாடி குடியிறுப்புகள் – சிறுவன் தலையில் விழுந்த சிமென்ட் பிளாஸ்டர்

கொழும்பு மோதர பகுதியில் உள்ள ஹெலமுத்து சேவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உட்பட 24 அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் தரமற்ற கட்டுமானங்களை கொண்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட பகுதிகளை பொதுமக்கள் வாழக்கூடிய மற்றும் பாதுகாப்பான நிலைக்கு தயார்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மோதரையில் உள்ள ஹெலமுத்து சேவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் ஏழாவது மாடியில் நேற்று (04) சிமென்ட் பிளாஸ்டரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவன் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்கான அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 8.30 மணியளவில், மோதர ஹெலமுத்து சேவனா அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் ஏழாவது மாடியில் இரண்டு வீடுகளுக்கு இடையே உள்ள வெளிப்புற சுவரில் உள்ள சிமென்ட் பிளாஸ்டரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இதன் போது காயமடைந்த ஏழு வயது சிறுவன் தனது பாட்டியுடன் வீட்டு வளாகத்தின் அடிவாரத்தில் உள்ள ஒரு கடைக்கு அருகில் நின்று கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இடிந்து விழுந்த சிமென்ட் பிளாஸ்டரின் துண்டு சிறுவனின் தலையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

ஹெலமுத்து சேவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் 2019 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )