
மார்ச் மாதத்தில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என அறிவிப்பு
மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் மார்ச் மாதம் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கூட்டுத்தாபனத்தின் தலைவர் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை அறிவித்துள்ளார்.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாகக் கொண்டு, விலை திருத்தம் தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் எதிர்காலத்தில் எடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே, எரிபொருள் ஒதுக்கீடு முறைமை இன்று நள்ளிரவு புதுப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
