சர்வதேச போட்டிகளில் இருந்து ஆண்ட்ரே ரஸ்ஸல் ஓய்வு

மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதன்படி, தனது சொந்த ஊரான ஜமைக்காவில் உள்ள சபினா பார்க்கில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்குப் பின்னர் ரஸ்ஸல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
37 வயதான ரஸ்ஸல் 2019 முதல் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றார். இதுவரை மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 84 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார்.
அவர் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியிலும் 56 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் வீரர் நிக்கோலஸ் பூரனுக்குப் பின்னர், இரண்டு மாதங்களுக்குள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் இரண்டாவது மேற்கிந்திய தீவுகள் வீரராக ரஸ்ஸல் இடம்பிடித்துள்ளார்.
இதற்கிடையில், அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷாய் ஹோப் (தலைவர்), ஜூவல் ஆண்ட்ரூ, ஜெட்டா பிளேட்ஸ், ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டு, ஷிம்ரான் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன், அல்சாரி ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், குடகேஷ் மோர்டி, ரோவ்மன் பவல், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்பர்ட்