யாழில். தரையிறங்கிய அமெரிக்க விமானம்

யாழில். தரையிறங்கிய அமெரிக்க விமானம்

நிவாரண பணிகளுக்கு  நேற்றைய தினம் கொழும்புக்கு வருகை தந்த  அமெரிக்கா விமான படையின் C130J Super Hercules விமானம்  இன்றைய தினம் காலை நிவாரண பொருட்களுடன் கொழும்பில் இருந்து புறப்பட்டு, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

நாடு முழுவதும் நிவார பணிகளுக்கு அமெரிக்காவிமான படையின் இரு Super Hercules  விமானங்கள் வருகை தந்துள்ளதுடன் இலங்கை விமான படையினருடன் இணைந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் வடமாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண பொருட்களை வழங்கும் முகமாக , கொழும்பில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )