அமானியன்ஸ் கிரிக்கெட் பியஸ்டாவின் சம்பியன் மகுடம் 2021 அணியின் வசம்
மிணுவான்கொடை அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களுக்கு இடையில் அமானியன்ஸ் கிரிக்கெட் பியஸ்டா -2025 தொடரின் சம்பியன் மகுடத்தினை 2021ஆம் ஆண்டு சாதாரன தர அணி தனதாக்கியது.
நூற்றாண்டு கடந்த வரலாற்றினைக் கொண்ட மிணுவான்கொடை, கல்லொலுவ அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டாவது பழைய மாணவர்களுக்கு இடையிலான அணிக்கு பதினொரு வீரர்கள் கொண்ட அமானியன்ஸ் கிரிக்கெட் பியஸ்டா -2025 தொடர் கடந்த 12,13 மற்றும் 14ஆம் திகதிகளில் அல்ஹாஜ் முனாஸ் மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.
இதில் 1986ஆம் ஆண்டு சாதாரன தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் முதல் 2021ஆம் சாதாரன தரம் எழுதிய மாணவர்கள் வரை சுமார் 26 அணிகள் பங்கேற்றிருந்தன.
இதில் முதல் சுற்று லீக் அடிப்படையில் இடம்பெற்று பின்னர் காலிறுதி மற்றும் அரையிறுதி என்பன விலகல் முறையில் இடம்பெற்றிருந்தன
அதற்கேற்ப அரையிறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற 2005 மற்றும் 2021 ஆகிய இரு அணிகளும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடாத்தின.
நேரம் போதாமை காரணமாக 4 பந்துகள் கொண்ட 4 ஓவர்களாக இடம்பெற்ற போட்டியில் முதலில் துடுப்பாடிய 2021ஆம் ஆண்டு அணி 20 ஓட்டங்களைப் பெற, பதிலுக்கு துடுப்பாடிய 2025ஆம் ஆண்டு அணி 10 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள 10 ஓட்டங்களால் இலகு வெற்றி பெற்ற 2021ஆம் ஆண்டு அணி சம்பியன் மகுடத்தினை தனதாக்கியது.
இத்தொடரின் சிறந்த வீரராக 2021ஆண்டு அணியின் தலைவரான அர்ஹம் தெரிவானார்.
மேலும் அல் அமான் பாடசாலைக்கு 2005ஆம் ஆண்டு அணியினர் தேசிய தரத்திலான பெட்மிண்டன் மைதானத்தினை அமைத்துக் கொடுப்பதாக பாடசாலை அதிபரிடம் உத்தரவாதமளித்தமை விசேட அமசமாகும்.
மேலும் இந்நிகழ்விற்கு அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆசிம் மற்றும் இந்நிகழ்வின் பிரதான அனுசரணையாளர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என மிக அதிகளவானவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)