அனைத்து வாகனங்களும் நாளை மாத்திரம், எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதி

அனைத்து வாகனங்களும் நாளை மாத்திரம், எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதி

வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் ஒற்றை அல்லது இரட்டை எண்களாகக் கொண்ட அனைத்து வாகனங்களுக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாளை (1) மாத்திரம், எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் இன்று இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி அனைத்து வகையான வாகனங்களும் நாளை எரிபொருளைப் பெற்றுக்கொள்ள
அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில், வாராந்த ஒதுக்கீட்டின் அடிப்படையில் எரிபொருள் அனுமதிப்பத்திரத்துக்கமைய எரிபொருள் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேவேளை, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவுகளை, 2026 மார்ச் 01 ஆம் திகதி நிலவிய எரிபொருள் விலைகளின் அடிப்படையில் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (31) கலந்துகொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஏனைய அனைத்துக் கொடுப்பனவுகளையும் மறு அறிவித்தல் வரை அதே விகிதத்தில் பேணுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகக் கூறினார்.

கடந்த காலப்பகுதியில் மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக இலங்கையின் எரிபொருள் விலைகளும் பலமுறை திருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )