
அனைத்து ரயில் சேவைகளிலும் தாமதம் ஏற்படும் – ரயில்வே திணைக்களம் அறிவிப்பு
அனைத்து ரயில் சேவைகளிலும் தாமதங்கள் ஏற்படக்கூடும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்ட ரயில் தடம் புரண்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து மீரிகம நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 9:35 மணியளவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது
ரயில், தடம் புரண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாற்று ஏற்பாடுகள் மற்றும் சேவை மறுசீரமைப்பு குறித்த தகவல்களுக்கு இலங்கை ரயில்வே திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ புதுப்பிப்புகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
CATEGORIES இலங்கை
