காலம் தாழ்த்தப்படும் அனைத்து விசாரணைகளும் துரிதமாக்கப்பட வேண்டும்

காலம் தாழ்த்தப்படும் அனைத்து விசாரணைகளும் துரிதமாக்கப்பட வேண்டும்

நிகழ்ந்த அல்லது நடடைபெறும் குற்றங்களுக்கான சட்டங்கள் இறுக்கமாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்பதுடன் காலம் தாழ்த்தப்படும் புதைகுழிகள் உள்ளிட்ட விசாரணைகளையும் விரைவுபடுத்தி பாதிக்கப்பட மக்களுக்கு தீர்வை வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரச சார்பற்ற இணையங்களின் தலைவர் சுகிர்தராஜ் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

எமது இணையம் 22 அமைப்புக்களை ஒன்றிணைத்து மனித உயிர்களின் பாதுகாப்பு அதற்காக குரல் கொடுத்துவரும் ஒன்றாகும்.

தற்போது வடக்கில் பல மனித அவலங்கள் நிகழ்த்தப்படதற்கான புதைகுழிகள் இனங்காணப்பட்டு அவை அகழப்பட்டு அதிகளவான மனித என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

இது மிகப்பெரும் மனித உயிர் சார்ந்த விடையமாகும். எமது ஒன்றியம் கடந்த காலம் முதற்க்கொண்டு இன்றுவரை மனித உரிமைகள் பாதுகாப்பு சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பை வலியுதுத்தி குரல் கொடுத்து அரசுகளுக்கு பெரும் அழுத்தை கொடுத்து வரும் அமைப்பு.

இந்த ரீதியில் தற்போதைய பேசுபொருளான மனித புதைகுழி விவகாரத்துக்கு உடன் விசாரணை மேற்கொண்டு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

அத்துடன் அண்மையில் கொழும்பில் மர்மமான முறையில் இறந்த பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பிலும் விசாரணைகள் செய்யப்படு உண்மை வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share This