
உலகளவில் முன்னணியில் இருப்பதை நோக்கி ஏஐ நிறுவனங்கள் செயல்பட வேண்டும் – பிரதமர் மோடி
இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், உலகளவில் முன்னணியில் இருப்பதை நோக்கி செயல்பட வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
உலகளாவிய தாக்கம்’ குறித்த உச்சி மாநாடு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு இந்திய ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தலைவர்களுடன் நடைபெற்ற கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.
இதன்போது உரையாற்றிய பிரதமர் மோடி,
“ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்முனைவோர் ஆகியோர் நாட்டின் எதிர்காலத்தை இணைந்து உருவாக்குபவர்கள்.
சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவு முக்கியமானதாக உள்ளது. ஏஐ உச்சி மாநாட்டை இந்தியா அடுத்த மாதம் நடத்துவதன் மூலம், தொழில்நுட்ப துறையில் இந்தியா முக்கிய பங்காற்றுகிறது.
செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தி மாற்றத்தை கொண்டுவர இந்தியா முயற்சிகள் எடுக்கிறது.
புதுமைகளை கண்டுபிடித்து அவற்றை மிகப் பெரியளவில் அமுல்படுத்தும் திறன் நம் நாட்டில் அதிகமாக உள்ளது. உலகுக்கு தனிச்சிறப்பான ஏஐ மொடலை இந்தியா அளிக்க வேண்டும்.
உலகுக்காக இந்தியாவில் தயாரிப்பதை அது பிரதிபலிக்க வேண்டும்” என்றார்.
இந்த கூட்டத்தில் அவதார், பார்த்ஜென், ஃப்ராக்டல், கான், ஜென்லூப், இன்டெலிஹெல்த், சர்வம், டெக் மஹிந்திரா, ஜென்டீக் உட்பட பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தலைமைய செயல் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மத்திய மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இணையமைச்சர் ஜிதின் பிரசாதா ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
