ஈராக் பெண்களின் திருமண வயது 9 ஆக குறைப்பு
ஈராக் நாட்டைப் பொறுத்தவரையில் பெண்களுக்கான திருமண வயது 18 ஆக உள்ளது. அதன்படி 1950 ஆம் ஆண்டில் குழந்தைத் திருமணம் தடை செய்யப்பட்டிருந்தாலும் கூட 18 வயதுக்கு முன்பு திருமணம் செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை 28 சதவீதமாக இருப்பதாக ஐ.நா ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இவ்வாறிருக்க ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 18 இலிருந்து 9 ஆக குறைக்க சட்ட திருத்தம் செய்ய அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
அரசின் இந்த தீர்மானத்துக்கு பெண்கள் மற்றும் மனித உரிமை குழுக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனாலும் நாடாளுமன்றத்தில் இம் முடிவுக்கு பெரும்பான்மையை நிரூபித்து இந்த மசோதாவை சட்டமாக்கும் முயற்சியில் அந் நாட்டு அரசு ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில் ஈராக்கில் ஷியா முஸ்லிம் பெண்களின் திருமண வயது 9 ஆகவும் சுன்னி முஸ்லிம் பெண்களின் திருமண வயது 15 ஆகவும் குறைந்து சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒழுங்குக்காகவே இந்த சட்ட நடவடிக்கை என்று ஈராக் நாடாளுமன்றத் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய நாடுகளில் பெண்களின் திருமண வயதை 18 இலிருந்து அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஈராக்கின் இந்த சட்ட நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.