13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு இன்று இரவு 11.00 மணி வரை கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி கம்பஹா, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி, பதுளை, மொனராகலை,
மாத்தளை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் உரிய முன்னெடுச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

Share This