பண்டிகை காலத்தை முன்னிட்டு மேலதிக பேருந்து சேவை

பண்டிகை காலத்தை முன்னிட்டு மேலதிக பேருந்து சேவை

பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று (24) தொடக்கம் மேலதிக பேருந்து சேவைகளை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஹட்டன், பதுளை, மட்டக்களப்பு வரையிலான நீண்ட தூர பயணங்களுக்கு சுமார் ஐம்பதுக்கும் மேலதிக பேருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.

நத்தார் தினமான நாளை (25) பயணிகளின் தேவைக்கு ஏற்ப மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இன்று முதல் இயங்கும் வழமையான பேருந்து சேவைகளுக்கு மேலதிகமாக இந்த மேலதிக பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This