“என் கண்ணீர் உன்னை சும்மா விடாது” – சீமானுக்கு நடிகை விஜயலட்சுமி பதிலடி

தன்னை பாலியல் தொழிலாளி என்று கூறிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நடிகை விஜயலட்சுமி பதிலடி கொடுத்துள்ளார்.
கண்ணீருடன் காணொளி ஒன்றின் ஊடக பேசிய நடிகை விஜயலட்சுமி, “நான் என்ன பாலியல் தொழிலாளியா சீமான்? என்னுடைய கண்ணீர் உன்னை சும்மா விடாது” என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.
முன்னதாக நேற்று சென்னை விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சீமான், என் மீது புகார் கொடுத்துள்ள நடிகை ஒரு பாலியல் தொழிலாளி. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்றார்.
மேலும், திராவிட முன்னேற்ற கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தன்னை எவ்வாறு பாலியல் குற்றவாளி என சொல்ல முடியும் எனவும் சீமான் கேள்வியெழுப்பியிருந்தார்.
என் மீது புகார் கொடுத்துள்ள நடிகை ஒரு பாலியல் தொழிலாளி. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்றும் சீமான் குறிப்பிட்டிருந்தார்.
வழக்கு விசாரணையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது என்ன எப்படி குற்றவாளி என கூற முடியும்? என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்திலேயே தொடர்ச்சியாக அவதூறு பரப்பி செயல்பட்டு வருகிறார்கள் என்றார்.
இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி கண்ணீருடன் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
” நான் என்ன பாலியல் தொழிலாளியா சீமான்? என்னை பாலியல் தொழிலாளி என்று சொல்லியிருக்கிறாய்… நான் பாலியல் தொழிலாளியாக இருந்தால் எதற்காக பெங்களூரில் என்னுடைய அக்காவுடன் கஷ்டபடப்போகிறேன்?
இந்த நாள் வரை நீ தப்பித்து இருக்கலாம். ஆனால் இனிமேல் நீ தப்பிக்கவே முடியாது. என்னுடைய கண்ணீரை உன்னை என்ன செய்யப்போகிறது என்பதை மட்டும் நீ பார்…என்னுடைய கண்ணீர் உன்னை சும்மா விடாது” என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.
முன்னதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்துள்ள முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.