500 தமிழ் பொலிஸார் சேவையில் இணைக்க நடவடிக்கை

2025ஆம் ஆண்டு இறுதிக்குள் 500 தமிழ் பொலிஸாரை சேவையில் இணைத்துக்கொள்ளும் ஆலோசனைகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொலிஸ் துறையில் 10ஆயிரத்துக்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுகின்றன. இதுகுறித்து பொலிஸ் திணைக்களத்துடன், நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பிரகாரம் 10ஆயிரம் பொலிஸாரை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக இவ்வாண்டு 2ஆயிரம் பொலிஸார் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர். இதில் 500 தமிழ் பொலிஸாரை இணைத்துக்கொள்வதற்கான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளோம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.