தமிழ்நாட்டில் வீதிகளில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்துக்கள் அதிகமாகிறது….
தமிழ்நாட்டின் வீதிகளில் அதிகமான மாடுகள் சுற்றித் திரிகின்றமையால் வீதி விபத்துக்கள் அதிகமாவதாக கூறப்படுகிறது.
இதனால் அம் மாடுகளைக் கட்டுப்படுத்துவது குறித்து விளக்கமளிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இப் பிரச்சினை தொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இவ் வழக்கில் கால்நடை துறை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையாளர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு இவ் வழக்கு விசாரணையை நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.