கிரிஉல்ல-மினுவங்கொட வீதியில் விபத்து – பலர் வைத்தியசாலையில்
![கிரிஉல்ல-மினுவங்கொட வீதியில் விபத்து – பலர் வைத்தியசாலையில் கிரிஉல்ல-மினுவங்கொட வீதியில் விபத்து – பலர் வைத்தியசாலையில்](https://oruvan.com/wp-content/uploads/2025/02/van-1.jpg)
கிரிஉல்ல-மினுவங்கொட வீதியில் உள்ள பரவாவில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று இன்று புதன்கிழமை (12) காலை இடம்பெற்றுள்ளது.
வேக கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த வேன் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.