கேகாலை – கலிகமுவ பகுதியில் விபத்து!! 25 பேர் படுகாயம்

கேகாலை – கலிகமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 25 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்தும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காயமடைந்தவர்கள் கேகாலை மற்றும் வரகாபொல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.