நிமோனியாக் காய்ச்சலால் யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலி

நிமோனியாக் காய்ச்சலால் யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலி

நிமோனியாக் காய்ச்சலால் யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவருக்கு கடந்த 30 ஆம் திகதி முதல் காய்ச்சல் ஏற்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு திடீரென உடல்நிலை மோசமடைந்ததால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை பிற்பகல் 03 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது உயிரிழப்பு நிமோனியாக் காய்ச்சலால் நிகழ்ந்துள்ளமை உடற்கூற்றுப் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This