வாழைச்சேனையில் கஜமுத்துக்களுடன் மூதூரைச் சேர்ந்த ஒருவர் கைது

வாழைச்சேனையில் கஜமுத்துக்களுடன் மூதூரைச் சேர்ந்த ஒருவர் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள தியாவட்டுவான் பகுதியில் நான்கு கஜமுத்துக்களை விற்பனை செய்ய முயற்சித்த திருகோணமலை மூதூரைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) இரவு விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை கடதாசிஆலை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான நேற்று இரவு 7.00 மணியளவில் விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி  தலைமையிலான குழுவினர் குறித்த  பகுதியில்  கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு கஜமுத்துக்களை விற்பனை செய்ய முற்பட்ட மூதூர் ஆலிம் நகரைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரை சுற்றிவளைத்து கைது செய்ததுடன் அவரிடமிருந்து கஜமுத்துக்களை மீட்டனர்.

கைது செய்யப்பட்வரையும் மீட்கப்பட்ட சான்று பொருட்களையும் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்ததையடுத்து  அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share This