
மகிந்தவை சந்தித்தது சீன வர்த்தகர்கள் குழு
சீன வர்த்தகர்கள் குழு ஒன்று நேற்று (16) தங்காலையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லத்தில் அவரைச் சந்தித்தது.
இந்த விஜயத்தின் போது முன்னாள் ஜனாதிபதிக்கு பரிசுகளை வழங்கிய குழுவினர், அவரது நலம் விசாரித்தனர்.
கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறி தங்காலையில் குடியேறிய பின்னர், முன்னாள் ஜனாதிபதியை சந்திக்க வந்த முதல் சீன வர்த்தகர்கள் குழு இதுவாகும்.
தேயிலை ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள இந்தக் குழு, வெலிகம மற்றும் நுவரெலியாவுக்குச் செல்லும் வழியில் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES இலங்கை
