விண்கலன்களை இணைப்பதில் ஏற்பட்ட கோளாறு….9 ஆம் திகதி தள்ளி வைக்கப்பட்ட திட்டம்
இஸ்ரோவானது அந்தரத்தில் சுழன்று வரும் இரண்டு விண்கலன்களை இணைக்கும் டாக்கிங் பரிசோதனையை எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு தள்ளி வைத்துள்ளது.
ஸ்பேடெக்ஸ் எனப்படும் இரு விண்கலன்களை அந்தரத்தில் ஒன்றுடன் மற்றொன்றை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் கடந்த 30 ஆம் திகதி இரவு 10 மணிக்கு பிஎஸ்எல்வி சி 60 ரொக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
இவ்வாறு விண்ணில் செலுத்தப்பட்ட ரொக்கெட்டிலிருந்த இரண்டு விண்கலன்களும் வெற்றிகரமாக பிரிந்து சென்றன.
இந்நிலையில் பிரிந்து சென்ற இரண்டு விண்கலன்களையும் இணைக்கும் நிகழ்வானது இன்று நடக்கும் என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் திங்கட்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் சில பிரச்சினைகள் கண்டுபிடிக்கப்பட்டதால் இத் திட்டம் 9ஆம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.