நடுக்கடலில் பழுதடைந்த படகு – தமிழகத்தை அடைந்த யாழ் இளைஞர்கள்

நடுக்கடலில் பழுதடைந்த படகு – தமிழகத்தை அடைந்த யாழ் இளைஞர்கள்

யாழ்ப்பாணம் காங்கேசந்துறையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் படகு பழுதடைந்த நிலையில் இந்தியா – தமிழகம் ஆறுகாட்டுத்துறை கடற்கரையை சென்றடைந்தனர்.

காங்கேசன்துறையில் இருந்து வினோத்குமார், சிந்துஜன் ஆகிய இரண்டு பேரும் பைபர் படையில் இந்திய எல்லைக்குள் வந்துள்ளனர். அப்போது பைபர்படகு பழுதாகி நின்றுள்ளனர்.

அவ்வழியாக வந்த நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்து ஆறுகாட்டுத்துறை பகுதி மீனவர்கள் படகையும், இரண்டு மீனவர்களையும் ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

இரண்டு பேரையும் வேதாரண்யம் கடலோர காவல் குழு பொலிஸார் கைது செய்து இவர்கள் மீன்பிடிக்க வந்தனரா? அல்லது கடத்தலுக்காக வந்தார்களா? என பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்

Share This