கனடிய பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு 181 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஹாஷிஷ் போதைப் பொருள் கடத்த முயன்றதற்காக 37 வயது கனடிய பெண் ஒருவர் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சுங்க கூடுதல் இயக்குநர் ஜெனரலும் ஊடகப் பேச்சாளருமானசிவலி அருக்கொட தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட பெண் கனடாவின் மாண்ட்ரீலில் இருந்து தோஹா வழியாக கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் இலங்கை வந்திருந்தார்.
வழக்கமான சோதனையை மேற்கொண்ட சுங்க அதிகாரிகள் அவரது பொருட்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 18,123 கிராம் ஹாஷிஷ் போதைப் பொருள்ளை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கை சுங்கத் துறையின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
இதனிடையே, சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.