கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து

கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் சுமார் 45 கோடி பேர் புனித நீராடியுள்ளனர்.

இந்நிலையில் கும்பமேளாவுக்காக அமைக்கப்பட்ட தற்காலிக நகரமான 19 ஆவது செக்டாரில் கல்பவாசி கூடாரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பற்றியது.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

வாயு கசிவினால் இவ் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லையென்ற போதிலும் அப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அனைத்தும் தீயில் கருகி சாம்பலாகிவிட்டன.

ஏற்கனவே செக்டார் பகுதியில் இஸ்கான முகாமில் இத் தீ விபத்து ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This