மின் தடையால் ரயில் போக்குவரத்து பாதிப்பு

திடீர் மின் தடை காரணமாக, ரயில்வே கடவைகளில் சமிக்ஞை அமைப்புகளின் செயற்பாட்டில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, ரயில் போக்குவரத்தில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரயில் கடவைகளில் பாதுகாப்பு வாயில்கள் செயற்படுவதிலும் சிக்கல்கள் ஏற்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கருத்திற்கொண்டு பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், மின் தடை காரணமாக ரயில் நிலையங்களில் அறிவிப்புகள் வெளியிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.