பொலன்னறுவையில் வாகன விபத்து – ஒருவர் பலி
பொலன்னறுவையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தீப உயன பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நிறுத்தப்பட்டிருந்த லொறியின் பின்புறத்தில் முச்சக்கர வண்டி மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது காயமடைந்த மேலும் மூவர் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.