12 ராசிகளுக்குமான இன்றைய ராசிப் பலன்கள்

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிப் பலன்கள்

கிரக மாற்றங்கள் ஒவ்வொரு ராசியிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை செய்யும். அந்த மாற்றம் ஒவ்வொரு நாளுக்குமான பலன்களைத் தீர்மானிக்கும். அந்த வகையில் இன்றைய நாளுக்கான 12 ராசிகளுக்குமான பலன்களைப் பார்ப்போம்.

மேஷம்

திருமண கனவு நிறைவேறும். அதற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மேலதிகாரிகளின் உதவி கிடைக்கும். பண வாய்ப்பு அதிகரிக்கும்.

ரிஷபம்

எண்ணங்கள் ஈடேறும். திருமணமானவர்களின் வாழ்க்கை சிறப்பாக மாறும். காதலில் விழிப்புடன் இருப்பது நன்மையளிக்கும். கோரிக்கைகள் நிறைவேறும்.

மிதுனம்

தொழிலுக்கான நேர்காணலில் வெற்றியடைவீர்கள். நினைத்த காரியம் வெற்றியடையும். உடல் நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

கடகம்

ஆரோக்கியம் மேம்படும். சுபவிடயங்களில் எதிர்பார்த்த நற்செய்தி கிடைக்கும். தந்தை வழி சொத்து கைக்கு வந்து சேரும். பணவரவு அதிகமாகும்.

சிம்மம்

சகோதரர்களுடனான அன்பு அதிகரிக்கும். கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற மனக்கவலைகள் வரலாம்.

கன்னி

குழந்தைப் பேறு கிடைக்கும். தேவையற்ற செலவுகளை குறைக்கவும். பெற்றோரின் உடல்நிலையை கவனத்தில் கொள்வது நல்லது தம்பதியினரிடையே அன்பு அதிகரிக்கும்.

துலாம்

இன்றைய தினம் எந்தவொரு நல்ல காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டாம்.

விருச்சிகம்

சம்பள உயர்வு கிடைக்கும். பெண்கள் செலவுகளை குறைத்துக் கொள்ளவும். முக்கிய செலவுகள் காத்திருக்கும்.

தனுசு

நட்பு வட்டாரம் விரிவடையும்.வேலைச்சுமை இருக்கும். மந்த நிலையாக காணப்படும். தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

மகரம்

உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சில கடமைகளை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்

தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வேலைக்கான அழைப்பு வரும். பாராட்டு கிடைக்கும்.

மீனம்

உடல் நிலை சோர்வாக காணப்படும். சிக்கனமாக இருக்கவும். விரும்பிய வேலை கிடைக்கும்.

 

Share This