257 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை அணி – ஆஸி.யின் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம்
![257 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை அணி – ஆஸி.யின் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் 257 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை அணி – ஆஸி.யின் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம்](https://oruvan.com/wp-content/uploads/2025/02/Screenshot-2025-02-07-110552.png)
இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.
நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான இந்த போட்டியல் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடிப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன் பிரகாரம் முதலில் துடிப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 257 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி சோபிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.
இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் 85 ஓட்டங்களையும் தினேஸ் சந்திமால் 74 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் மிச்சல் ஸ்டார்க், நெதன் லியோன் மற்றும் மெத்யூ குஹ்னேமன் ஆகியோர் தலா 3 விக்கட்டுக்கள் வீதம் கைப்பற்றியுள்ளனர். ஆஸி. பந்துவீச்சாளர்களின் ஆதிக்கமே போட்டியின் ஆரம்பம் முதல் நிலவுவதாக வர்ணனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அவுஸ்ரேலியா அணி முதல் இன்னிஸுக்காக துடுப்பெடுத்தாடி வருகிறது. சற்றுமுன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 6 ஓவர்கள் நிறைவில் 30 ஓட்டங்களை அவுஸ்ரேலிய அணி பெற்றுள்ளது.
டிராவிஸ் ஹெட், உஸ்மன் கவாஜா ஆகியோர் களத்தில் உள்ளனர்.