மூன்றாம் வகுப்பு இருக்கைகளை முன்பதிவு செய்ய முடியாது – புகையிரத சேவைகள் திணைக்களம் அறிவிப்பு

மூன்றாம் வகுப்பு இருக்கைகளை முன்பதிவு செய்ய முடியாது – புகையிரத சேவைகள் திணைக்களம் அறிவிப்பு

பல ரயில் சேவைகளில் மூன்றாம் வகுப்பு இருக்கை முன்பதிவுகளை நிறுத்தி வைக்க இலங்கை புகையிரத சேவைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டிகளில் முன்பதிவு இன்றி பயணிகள் பயணிக்கும் வகையில் இந்த அறிவிப்பை புகையிரத சேவைகள் திணைக்களம் எடுத்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு காலை 5.55 மற்றும் 8.30 மணிக்கு இயக்கப்படும் புகையிரதம், கொழும்பு கோட்டையிலிருந்து பிற்பகல் 3.45 மணிக்கு தலைமன்னார் வரை  இயக்கப்படும் புகையிரதத்தில் இவ்வாறு முன்பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த ரயில்களில் மூன்றாம் வகுப்பு முன்பதிவுகள் இனி கிடைக்காது. என்றாலும், முன்பதிவு செய்யப்படும் இரண்டாம் வகுப்பு இருக்கைகளின் எண்ணிக்கையை இலங்கை புகையிரத சேவைகள் திணைக்களம் அதிகரித்துள்ளது. இதனால் பயணிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கு மாற்று வழி உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This