மகிந்த ராஜபக்ச மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இடையிலான சந்திப்பு

மகிந்த ராஜபக்ச மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இடையிலான சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று ( 5) காலை கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது .

அங்கு, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதுடன், நாட்டின் தற்போதைய நிலைமை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதேவேளை, அண்டை நாடுகளாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலவும் புரிதல் மற்றும் பரஸ்பர மரியாதை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே ஆழமாக வேரூன்றிய மத, கலாச்சார மற்றும் சமூக உறவுகளை முன்னாள் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.

இந்த நிகழ்வில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://x.com/PresRajapaksa/status/1887172661463429372/photo/1

Share This