இன்று முதல் உப்பின் விலை அதிகரிப்பு

இன்று முதல் உப்பின் விலை அதிகரிப்பு

இன்று முதல் உப்பின் விலையை அதிகரிக்க அம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, 400 கிராம் உப்புத்தூள் பக்கட் ஒன்றின் விலை 100 – 120 ரூபாய் வரையிலும், உப்பு துகள் பக்கட் ஒன்றின் விலை 120 – 180 ரூபாய் வரையிலும் அதிகரிக்கப்படவுள்ளது.

இவ்வாறு உப்பின் விலையை அதிகரிப்பது தற்காலிக தீர்மானம் மாத்திரமே என அம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி. நந்தன திலக தெரிவித்தார்.

எதிர்வரும் மார்ச் மாதத்தில் அம்பாந்தோட்டை உப்பளத்தில் உப்பு அறுவடை கிடைத்தவுடன் உப்பின் விலையை குறைப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து உப்பு இறக்குமதி செய்வதற்கு அதிக தொகை செலவழிந்தமையே உப்பு விலையை அதிகரிக்க காரணம் என்றும் அவர் கூறினார்.

Share This