நீர் கட்டணமும் குறைக்கப்படும் சாத்தியம்?

நீர் கட்டணமும் குறைக்கப்படும் சாத்தியம்?

நீர் கட்டணத்தை 10 தொடக்கம் 30 வீதம் வரையில் குறைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டண குறைப்புக்கு சார்பாக இவ்வாறு நீர் கட்டண குறைப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பேச்சாளர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

நீர் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் தேடுவதற்காக குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீர் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழு அறிக்கை எதிர்வரும் சில நாட்களில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவரிடம் சமர்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, அதன் தலைவர் மூலம் குறித்த அறிக்கை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் சமர்பிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பிலான முன்மொழிவுகள் அமைச்சரவையில் சமர்பிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share This