உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி நடத்த முடியும் சபை தலைவரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்த சட்ட மூலம் தொடர்பில் எதிர்வரும் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான சட்டமூலத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை என சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

என்றாலும், உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் கடந்த 27ஆம் திகதியே கிடைக்கப்பெற்றுவிட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Share This