தண்ணீர் தொட்டியில் விழுந்த தாய், மகன்கள் உயிரிழப்பு
நாமக்கல் பரமத்திபாலை, போருபத்திய பகுதியில் வசித்து வரும் ரவிகுமார், இந்துமதி தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அவர்களது மூத்த மகனான மூன்று வயது யாத்விக் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறுதலாக திறந்து வைத்திருந்த தண்ணீர் தொட்டியில் எதிர்பாராத விதமாக விழுந்துள்ளார்.
மகனைக் காப்பாற்றுவதற்காக அவரது தாய் 11 மாதமேயான குழந்தையுடன் 10 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் இறங்கியுள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மூன்று பேரும் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.