வாகனங்களை பாதுகாப்பாக இறக்குமதி செய்வதற்குத் தயார்

வாகனங்களை பாதுகாப்பாக இறக்குமதி செய்வதற்குத் தயார்

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், வாகனங்களை பாதுகாப்பாக இறக்குமதி செய்வதற்கு தயார் என ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வில்சன் குவா தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு முதல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கும் மீள்ஏற்றுமதி செய்வதற்கும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை கப்பல்களில் இருந்து இறக்குவதற்கு அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் உள்ளதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக தலைமை நிர்வாக அதிகாரி வில்சன் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This