சூறாவளி காற்று வீசும் கோள்….மணிக்கு 33,000 கிலோமீட்டர் வேகம்

சூறாவளி காற்று வீசும் கோள்….மணிக்கு 33,000 கிலோமீட்டர் வேகம்

ஒரு புறக்கோளில் மணிக்கு 33,000 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி வீசுவதை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பூமியிலிருந்து சுமார் 500 ஒளி ஆண்டுகள் தொலைவில் வாயுப் புறக்கோள் ஒன்று உள்ளது.

மிகக் குறைந்த நிறையைக் கொண்ட இந்தக் கோளில் பூமத்திய ரேகையில் சூறாவளி காற்று வீசும் பெரிய வளையம் ஒன்று உள்ளது.

ஐரோப்பிய தெற்கு ஆய்வக விஞ்ஞானிகள் பெரிய தொலைநோக்கியின் உதவியுடன் இக் காற்றின் வேகத்தை அளவிட்டுள்ளனர்.

WASP-127b கோளில் காற்றின் வேகம் வினாடிக்கு 9 கிலோமீட்டர் ஆகும். இது ஐந்து புயலின் அளவை விட 130 மடங்கு அதிகம்.

இதுவே நமது சூரியக் குடும்பத்தில் பதிவான மிக வேகமான காற்றாகும்.

Share This