கல்குவாரி நீரில் மூழ்கி மூவர் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் எனும் இடத்திலுள்ள கல்குவாரி நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
செயல்பாட்டில் இல்லாத அந்தக் கல்குவாரியில் பெண் ஒருவர் தனது இரு மகள்களுடன் ஆடைகளைக் கழுவச் சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அப் பகுதியிலிருந்த மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் மூன்று உடல்களையும் மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.