அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – கலப்பு இரட்டையரில் அவுஸ்திரேலிய ஜோடி சாம்பியன்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
நேற்று வெள்ளிக்கிழமை ராட் லேவர் அரங்கில் நடந்த கலப்பு இரட்டையர் இறுதி போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவில் அவுஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ்-ஒலிவியா கடெகி ஜோடி, சக நாட்டின் கிம்பர்லி-ஜான் பாட்ரிக் ஜோடியுடன் மோதியது.
இதில் ஜான் பியர்ஸ்-ஒலிவியா ஜோடி 6-3, 4-6, 10-6 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றது.
22 வயதான ஒலிவியா மற்றும் 36 வயதான பியர்ஸ், முதல் சுற்று புள்ளிகளில் 79 சதவீதத்தை வென்று இந்த வெற்றியை பதிவுசெய்துள்ளனர்.
2013 ஆம் ஆண்டு மேட் எப்டன் மற்றும் ஜார்மிலா கஜ்டோசோவா ஆகியோர் சாம்பியன் பட்டத்தை வென்றதிலிருந்து தொடர்ச்சியாக கலப்பு இரட்டையர் பிரிவில் இவர்களே வெற்றி வாகை சூடிவந்தனர். 2013ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல்முறையாக ஒலிவியா – பியர்ஸ் ஜோடி அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் வெற்றிபெற்றுள்ளது.