அரிசி கடத்தலில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது

அரிசி கடத்தலில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது

இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலின்படி, 20.01.2025 அன்று ஓட்டமாவடி 02, ஜும்மா பள்ளி வீதியில் உள்ள ஒரு களஞ்சியத்தில் சோதனை நடத்தியபோது, மட்டக்களப்பு நுகர்வோர் விவகார அதிகாரிகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசியைக் கண்டுபிடித்தனர்.

உள்நாட்டு அரிசி என்று கூறி அதிக விலைக்கு விற்பதற்கு தயார் நிலையில் இருந்த 21,000 கிலோகிராம் அரிசியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொகை ஒவ்வொன்றும் 30 கிலோகிராம் கொண்ட 700 மூட்டைகளில் அடைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடதக்கதாகும்.

மீட்கப்பட்ட அரிசி தொகை மற்றும் இரண்டு சந்தேக நபர்களும் நுகர்வோர் சேவைகள் அதிகார சபையால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Share This