பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கண்ணீர் விட்ட அழுத டி.இமான்…யாரை நினைத்து தெரியுமா?

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கண்ணீர் விட்ட அழுத டி.இமான்…யாரை நினைத்து தெரியுமா?

சினிமாவில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இவர்களுக்கு அடுத்ததாக தனக்கென ஒரு தனி பாணியை இசையில் கொண்டு வந்தவர் இசையமைப்பாளர் டி.இமான்.

எப்பொழுதெல்லாம் மனம் சோர்வாக இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் டி.இமானின் இசையில் வெளிவந்த பாடல்களை கேட்டால் மனம் அமைதியாகும் என்பது பலரின் அனுபவ உண்மை. அதிலும் இவரது காதல் பாடல்கள் காதுகளில் தேன் வந்து பாய்வதைப் போல் இருக்கும்.

இவ்வாறிருக்க இன்று வெள்ளிக்கிழமை அவரது 42 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் நடுவர்களில் ஒருவராக உள்ளார்.

இந்நிலையில் நாளை ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியில் அவரது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

அப்போது ஒளிபரப்பப்பட்ட காணொளியில் இடம்பெற்ற அவரது அம்மாவின் புகைப்படத்தைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார் டி.இமான்.

அதற்கான ப்ரமோ….

Share This